மேற்கு அலாஸ்காவில் உள்ள ஒரு தொலைதூர ரேடார் நிலையத்தை அணுகிக்கொண்டிருந்தபோது, எட்டு பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆங்கரேஜுக்கு மேற்கே சுமார் 450 மைல் (725 கி.மீ) தொலைவில் உள்ள கேப் நியூனென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அந்த விமானம், சிவில் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்பட்ட ஒரு விமானம் என்று இராணுவம் தெரிவித்தது.














