துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
















