நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட தினசரி தேடுதல் நடவடிக்கைகளில் 537 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று (23) 27,001 பேர் சோதனையிடப்பட்டு, இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குற்றங்கள் தொடர்பாக 19 பேர் நேரடியாக அடையாளம் காணப்பட்டதாகவும், பிடியாணை நிலுவையில் இருந்த 147 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 50 பேரையும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 89 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,126 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.













