வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 17ஆம் திருவிழா இடம்பெற்றது.
17ஆம் திருவிழாவின் போது வள்ளி தெய்வானையும், வேல் பெருமானும் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
















