கடந்த 16 /7/2026 அன்றைய தினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்ப இன்மை காரணமாக இடை நடுவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது .
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன் கருணநாதன் இளங்குமரன் மற்றும் பிரதேச செயலாளர் பிரதேச சபை தவிசாளர்கள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொலிசார் இராணுவத்தினர் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர் இவர்களின் பங்கு பெற்றுளுடன் குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவசாயம் எல்நினே தாக்கம் டிட்வா புயலின் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய பல்வேறு அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது














