அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரோபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் செப்டம்பர் 6 முதல் 10 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ-பசிபிக் பிராந்திய சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றில் அமெரிக்கா-இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, தலைவர் டிபெல்லாவும் ஆணையர் ஹார்வியும் இலங்கை அரசாங்கம் மற்றும் கடல்சார் துறையின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார்கள்.
தலைவர் டிபெல்லா 8 ஆவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட மாநாட்டில் உரையாற்றுவார், மேலும் ஆணையர் ஹார்வி ஒரு குழுவில் பங்கேற்பார்.

















