• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

Special meeting on educational reforms led by Harini Amarasuriya!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் 2026.10.22 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் (Revised National Curriculum Framework – 2026) மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றளிப்பு சட்டகம் (School Level Assessment and Certification Framework) தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதலாம் தரத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்கான தற்போதைய தயார்நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், இணைய வசதிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை வழங்கும் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஐந்து தூண்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்காக தேசிய வழிநடத்தல் குழுவொன்றும், அந்த ஐந்து தூண்களுக்கும் உரிய ஐந்து உபகுழுக்களும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2026 ஜனவரி மாதத்தில் முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் செயலாளர் விளக்கமளித்தார். மேலும், 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்வி முறைமை உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, தேசிய கலைத்திட்டச் சட்டகத்தைத் தயாரிக்கும் போது அடிப்படை ஆய்வுகள் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கலைத்திட்டச் சீர்திருத்தச் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் அறிவு, ஒழுக்கப் பண்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முழுமையான அணுகுமுறையையும் (Holistic), கற்றல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையையும் (Outcome-based) கொண்ட கல்வி முறைமையை நோக்கிப் பாடசாலை முறைமையை வழிநடத்துவதன் மூலம், எதிர்கால உலகிற்கு ஏற்ற மனிதப் பண்புகளைக் கொண்ட புத்தாக்கவாதிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உருவாக்குவதற்கு இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

Next Post

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Related Posts

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு
இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

2026-10-23
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!
இலங்கை

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

2026-10-23
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!
இலங்கை

நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

2026-10-23
காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!
இலங்கை

காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

2026-10-23
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

2026-10-23
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்!

2026-10-23
Next Post
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

0
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

0
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

0
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

0
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

0
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

2026-10-23
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட கூட்டம்!

2026-10-23
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

2026-10-23
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

2026-10-23
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

2026-10-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: