முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (18) தொலைபேசி வாயிலாக அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரரணில் விக்ரமசிங்க நேரடியாக மஹிந்த ராஜபக்ஷைத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, 1945-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் திகதி பிறந்தார்.
அவர் இன்று தனது 81 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாகப் பணியாற்றியதுடன், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.















