நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பயணக்கட்டுப்பாடு கடந்த 25ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.















