மெக்ஸிகோவில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியின் ஆய்வக முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மெக்ஸிகோவில் ஃபைசர், கோவேக்சின், அஸ்ட்ராஸெனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
6 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே மெக்ஸிகோ அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 4 நிறுவனங்களின் தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
தடுப்பூசி செலுத்த ஆரம்பித்ததன் பின்னர், அங்கு கொரோனா உயிரிழப்பு வீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் கொவிட்-19 பாதிப்பினால் 15ஆவது இடம் மற்றும் உயிரிழப்பினால் நான்காவது இடத்தில் உள்ள மெக்ஸிகோவில் இதுவரை 2,405,722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 222,657பேர் உயிரிழந்துள்ளனர்.