• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

அரச அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – சாணக்கியன் கண்டனம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/16
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
77 1
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த மத குரு முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இவர்  அவரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தார்.

இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் முடங்கியிருந்தது. பிரதேச செயலாளரையும், அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்குவின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அங்குள்ள ஊழியர்கள் வீதியில் இறங்கி குறித்த பிக்குவை கைது செய்யக்கோரி போரட்டம் நடாத்திய போதும் மக்களையும் ஊழியர்களையும்  காப்பாற்ற வேண்டிய பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பெண் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ. எமது மக்களுக்கு இவ் நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை வாழும் உரிமையும் இல்லை.

இவரின் இவ்வாறான செயல்பாடுகள் ஆனது எமது மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட இவரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தேன்.

இவரினால் எமது மக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா என்ற கேள்விக்குறி எழுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளுக்கு மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அரச தரப்பு அரசியல்வாதிகளை நம்பி இருந்து எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை.

எமது மக்களே மென்மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எமது மக்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அம்பிட்டிய சுமனரத்ன தேரர்இரா.சாணக்கியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றது சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தை!

Next Post

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள திடீர் பாதுகாப்பு – எதிர்க்கட்சி கேள்வி!

Related Posts

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!
இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி
இலங்கை

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
Next Post
மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள திடீர் பாதுகாப்பு - எதிர்க்கட்சி கேள்வி!

வவுனியாவில் ஆயிரம் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை – சிவசக்தி குற்றச்சாட்டு!

வவுனியாவில் ஆயிரம் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை - சிவசக்தி குற்றச்சாட்டு!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.