• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் – யாரும் தடுக்க முடியாது என்கிறார் டக்ளஸ்!

பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் – யாரும் தடுக்க முடியாது என்கிறார் டக்ளஸ்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/22
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
71 1
A A
0
59
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மருதங்கேணி – வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் அமைந்துள்ள கட்டைக்காடு எழுவரைக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிரதேச மீனவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்குமாறு  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் – குறிப்பாக விவசாயம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால குளங்களில் கடலுணவு வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய  கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, “சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்கான பிரதேசமாக சுமார் 19,000 ஹெக்ரேயர்களும் நாகர் கோவில் பிரதேசத்தில்  சரணாலயமாக மேலும் 19,000 ஹெக்ரேயர்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, மணற்காடு சவுக்குத் தோப்பு பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றினால் வாழ்வாதார செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்களால் பிரதேச செயலகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இதனையடுத்து, வனப் பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதேச பிரதானிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி எந்தத் தரப்பினது நியாயமான நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் கொள்கை முடிவு மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

blank blank blank blank

Related

Tags: டக்ளஸ் தேவானந்தாமீன் பிடிவனப் பாதுகாப்புவனஜீவராசிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Next Post

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

Related Posts

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!
இலங்கை

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
அம்பாறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

2026-02-03
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

2026-02-03
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை
இலங்கை

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

2026-02-03
இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்
அம்பாறை

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

2026-02-03
இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி
இலங்கை

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

2026-02-03
Next Post
வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  – பொலிஸார் விசாரணை

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  - பொலிஸார் விசாரணை

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

0
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

0
சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

0
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

2026-02-03
சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

2026-02-03
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

2026-02-03

Recent News

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

2026-02-03
சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.