ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய(06) போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 08 விக்கட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 174 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 174 ஓட்டங்களை பெற்று 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
குசால் மென்டிஸ் 57 ஓட்டங்களையும், பதும் நிசங்க 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் நீடிக்கின்றது.




















