பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று காலை வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்து, பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்காவீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரி கற்கை பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.
இதன்போது வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















