• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/09
in மட்டக்களப்பு
70 1
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர்த் தேவையைப்  பூர்த்திசெய்யும் வகையில் நேற்றைய தினம்  மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் குடிநீர் திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த குடிநீர் திட்டத்திற்கு 100மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தனியாக அபிவிருத்தியை மட்டும் இலக்காகக் கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது என்பது எங்களுக்கு தெரியும். தனியாக  உரிமையினை மட்டும் இலக்காக கொண்டு வேலைசெய்யும்போது அபிவிருத்தியை இழந்து நிற்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில்  தமிழ் சமூகம் தன் இருப்பினைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டுமானால் உரிமையினையும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று இனமக்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தினை எடுத்துப்பார்த்தால் தங்கள் சமூகத்தின்  உரிமை சார்ந்த விடயத்திலும், அபிவிருத்தியிலும் கவனமாக இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும்பான்மை சமூகமாக தமிழ் சமூகம் இருந்து வந்தது.  ஆரம்பத்தில் 58.9 சதவீதம் கிழக்கில் தமிழர்கள் இருந்தனர். ஆனால் அது  தற்போது 38.6வீதமாக மாறியுள்ளது.

சுமார் 20சதவீதத்தால் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. இது கிழக்கில் தமிழர்களின்  பாரிய வீழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது” இவ்வாறு அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

blank blank

Related

Tags: Batticoloaஎஸ்.வியாழேந்திரன்ஜீவன் தொண்டமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Next Post

‘பிளாஸ்டிக் பொருட்களிடமிருந்து விலங்குகளைக் காப்போம்‘

Related Posts

பரபரப்பான மட்டக்களப்பு மண்! – யாரும் ஆஜராக வேண்டாம்!
இலங்கை

2026-04-01
வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

2026-03-30
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!
இலங்கை

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

2026-03-30
Next Post
‘பிளாஸ்டிக் பொருட்களிடமிருந்து விலங்குகளைக் காப்போம்‘

‘பிளாஸ்டிக் பொருட்களிடமிருந்து விலங்குகளைக் காப்போம்‘

கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு 'தமிழினக் காவலன்' விருது

‘பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள்‘

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

0
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.