• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்றத்தில்  நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும்! -ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும்! -ரஞ்சன் ராமநாயக்க

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/26
in இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 1
A A
0
34
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடைவதற்கு மக்களின்  ஆதரவு வேண்டும் ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எம்மிடம் சிலர் எதற்காக புதியக் கட்சியை ஸ்தாபித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த காலங்களில் நான் எனது வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்தேன். ஒரு வருடமும் 8 மாதங்களும் நான் சிறையில் இருந்தேன். கொலை செய்தோ, திருடியோ, போதைப்பொருள் கடத்தியோ, பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியோ சிறைக்குச் செல்ல வில்லை. நான் எதற்காக சிறைக்குச் சென்றேன் என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள்.

நான் அங்குணுகொலபொலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஜே.வி.பி. மாநாட்டில் தாக்குதல் நடத்திய நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவருடன்தான் இருந்தேன். என்னை சிறைச்சாலையிலேயே கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள். நான் அந்த சிறைச்சாலையில் பெரும் சிரமங்களுக்கு உள்ளானேன். கொரோனா காலம் என்பதால், என்னை பார்க்க உறவினர்களுக்குக்கூட அனுமதியில்லை.

நான் வெளியே வந்தவுடன் பலரும் மீண்டும் நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்டார்கள். அந்த மக்களின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். திருடர்கள் இருக்கும் கட்சியில் இருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், அவர்கள் இருக்கும் அதே நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும். இதற்கு மக்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

நாம் இன்று தூய்மையானவர்களுடன் இணைந்து எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே, நாம் போட்டியிடும் 9 மாவட்டங்களிலும் பெரும் வெற்றி பெற வேண்டும். நான் சிறைக்குச் சென்று வந்த பின்னர் பல நாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தோம். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் சுதந்திரத்திற்குமுன்னர் எம்மை விட பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், இந்த நாடுகள் எல்லாம் இன்று எங்கோ சென்று விட்டன.

நான் எந்தவொரு காலத்திலும் கொள்ளையடித்தது கிடையாது. அத்தோடு, நான் திருமணமும் செய்துக் கொள்ளவில்லை. எனவே, நான் சொத்துக்களை எனது குடும்பத்திற்காக சேர்க்க வேண்டிய தேவை இல்லாத காரணத்தினால்தான் பலரும் எனக்கு உதவிகளை செய்ய முன்வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சிறியதொரு அறிவிப்பைத்தான் விடுத்தேன். ஆனால், இதனைக் கேட்டு பிரதான கட்சிகளுக்கு பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளது. இதனால்தான் எனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை பேர் இருக்கும்போது, எனக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். காரணம், நான் கசப்பான உண்மைகளை கதைப்பதால் தான்….

எனது மாமாவான விஜயகுமார துங்க அரசியலுக்கு வந்தபோதுகூட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அஞ்சினார். அவருக்கு நக்சலைட் என்று முத்திரைக் குத்தி 3 மாதங்கள் சிறையிலும் அடைத்தார்கள். ஏன் இப்படி அஞ்ச வேண்டும்?

நான் எந்தவொரு சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபட வில்லை. எனினும், நாம் அரசியல் திருடர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளமையால்தான் எனது அரசியல் பயணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று இவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

நான் மக்களின் நண்பன். எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டேன். எமது கட்சி மீது நம்பிக்கை வையுங்கள். குரல் இல்லாதவர்களின் குரலாக எமது கட்சி ஒலித்துக் கொண்டிருக்கும்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: UDVஐக்கிய ஜனநாயகக் குரல்ரஞ்சன் ராமநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது! -பெத்தும் கேணர்

Next Post

மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

Related Posts

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
Next Post
மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்ட விதிகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-கண்காணிப்பாளர்கள் வருகை!

எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

0
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

2026-04-23

Recent News

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.