• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை  இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் செயலாற்றும்-விஜித்த ஹேரத்!

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் செயலாற்றும்-விஜித்த ஹேரத்!

Rahul by Rahul
2025/02/26
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் நேற்று இக்கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும் என்றும் இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அவர் தெரிவித்தார்

எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவு செய்தனர்.

அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட நாடாளுமன்றமே மலையகத்தைச்சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய நாடாளுமன்றமாகத் திகழ்கிறது.

தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச்செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம்.

அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சிநிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம்.

அடுத்ததாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உறுதிபூண்டிருக்கிறது.

அதன்பிரகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும்.

அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும்.

அத்துடன் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களிலும், உபகுழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது. அக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: Governmentharmonylkanewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்!

Next Post

2025 சாம்பியன்ஸ் டிராபி: மழையால் கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்க – அவுஸ்திரேலிய போட்டி!

Related Posts

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்
இலங்கை

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்
இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!
இலங்கை

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
Next Post
2025 சாம்பியன்ஸ் டிராபி: மழையால் கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்க – அவுஸ்திரேலிய போட்டி!

2025 சாம்பியன்ஸ் டிராபி: மழையால் கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்க - அவுஸ்திரேலிய போட்டி!

இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!

இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!

அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

0
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

0
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16

Recent News

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.