• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் – பிரதமர்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் – பிரதமர்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (27) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கடந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வினாக்களை ஒத்த மூன்று வினாக்கள், பரீட்சைக்கு முந்திய தினம் குருநாகல் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் தனது மேலதிக வகுப்பு சமூக ஊடகக் குழுவில் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சம்பவத்துடன் தொடர்புடைய மனுவின் பதின்மூன்றாவது பிரதிவாதிக்கு, மூன்று மில்லியன் ரூபாவும் ஆறாவது மற்றும் ஒன்பதாவது பிரதிவாதிகள் என குறிப்பிடப்பட்டவர்களால் 2 மில்லியன் ரூபாவும் அரசாங்கக் கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களின் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியக் கிளையினூடாக மட்டுமே உரிய வினாக்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளுதல், அந்தச் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கிளையிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், இரகசியக் கிளைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் கடுமையாகப் பரிசோதித்தல், வினா தயாரிப்பு குழக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேரப்புச் செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் ஒரு வளவாளர் தொகுதியையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவரான தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து உடனடியாக நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு விசாரணை முடிவை தெரிவிப்பதற்கும், சம்பளம் இன்றி பணியை விட்டு இடைநிறுத்துவதற்கும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் தெரியவந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியரும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த ஆசிரியரின் முழு சேவைக் காலத்திற்கும் நடைமுறைக்கு வரும் வகையில் பரீட்சைக் கடமைக்குத் தடை விதிக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவரது ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிஉல்ல வலய அலுவலகத்தினால் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, ஏற்கனவே அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புலமைப்பரிசில் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு நிகரான வினாக்களை தனது வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்ட குருநாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலையின் ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் ஒருவருக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக திணைக்களத்தின் இரகசியக் கிளைகளில் தற்போது பின்பற்றப்படும் பாதுகாப்புச் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்துதல்.

இரகசிய கிளைகளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க கூடிய வகையில் உள்ளக பாதுகாப்பு கேமரா முறைமைகளை இற்றைப்டுத்துதல், வினாத் தாள்களை தயாரிக்கும் குழுக்கள் மூலம் வினாத்தாள்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக, பகுதியளவு தன்னியக்க முறைமையை உருவாக்குவதன் மூலம் மனிதத் தலையீட்டைக் குறைக்கக்கூடிய அளவுக்கு அந்த முறைமைகளை விருத்திசெய்தலும் மோசடிகளைத் தடுப்பதற்கும், பரீட்சை கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், கண்காணிப்பு அளவை அதிகரிப்பதற்கும், பரீட்சைக் கூடங்களில் கையடக்கத் தொலைபேசியை கண்காணிப்பாளருக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்தல், பரீட்சை நிலையங்களுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்கமான ஊழியர்களுக்கு மேலதிகமாக, வெளி மேற்பார்வையாளர்களை முழுநேரமாக பரீட்சை நிலையங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், பரீட்சைக்கு தோற்றிய எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பரீட்சைக்கு முன் கலந்துரையாடப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கி வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ததால் பரீட்சை மதிப்பீடு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், 2024.12.31 ஆந் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின்னர், வினாத்தாள் மதிப்பீட்டு பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Related

Tags: Harini AmarasuriyaScholarship Examபுலமைப்பரிசில்ஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்!

Next Post

அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி?

Related Posts

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
இலங்கை

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை
இலங்கை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

2026-01-30
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
இலங்கை

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

2026-01-30
சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –
யாழ்ப்பாணம்

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

2026-01-30
Next Post
அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி?

அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி?

கிரேண்ட்பாஸில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

மோதலில் இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

தமிழ் ரசிகர்களின் அன்பில் மூழ்கிய டிராகன் பட நடிகை கயாடு லோஹர்!

தமிழ் ரசிகர்களின் அன்பில் மூழ்கிய டிராகன் பட நடிகை கயாடு லோஹர்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

0
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.