தேசிய லொத்தபர் அபிவிருத்தி சபையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் ஜீப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சபர்களே கொழும்வு மாவட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (27) வத்தளை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அவர்கள் வைத்திருந்த 04 கையடக்கத் தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 31, 32 மற்றும் 40 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இன்று (28) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
நாரஹேன்பிட்டி காவல்துறையினரும் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














