ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை (10) காலை நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவானதை ஆஸ்திரிய பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பதில் நடவடிக்கை தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந் நாட்டு செய்திச் சேவையான Kronen Zeitung, துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியது.
படுகாயமடைந்தவர்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் அடங்குவர் என்று உள்ளூர் காவல்துறையை மேற்கோள் காட்டி ஆஸ்திரிய அரசு ஊடகமான ORF செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி, ஒரு மாணவர் என கூறப்படுகிறது.
அதேநேரம், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது என்று ORF தெரிவித்துள்ளது.
















