அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்ற கைதி ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த குற்றச்சாட்டின் பேரில், மொஹான் கருணாரத்ன கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














