இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை (17) முதல் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியைத் தொடங்குகின்றன.
2019 ஆம் ஆண்டு உலகளாவிய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரு அணிகளும் சிறப்பாக செயல்படவில்லை.
2019-21 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் முறையே 7 ஆவது மற்றும் 9 ஆவது இடங்களைப் பிடித்தன.
2021-23 ஆம் ஆண்டு சுழற்சியில் இலங்கை 5 ஆவது இடத்தைப் பிடித்தது.
அதேநேரம், பங்களாதேஷ் 9 ஆவது இடத்தை பிடித்தது.
2023-25 சுழற்சியில், இலங்கை மற்றும் பங்களாதேண் அணிகள் முறையே 6 ஆவது மற்றும் 7 ஆவது இடங்களைப் பிடித்தன.
எனவே, அண்மைய காலங்களில் மிக நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் போராடிய இந்த அணிகளுக்கு புதிய சுழற்சி மீண்டு எழும் நோக்குடன் நாளைய போட்டியில் களம் காணுகின்றன.
இரு அணிகளும் இதுவரை மொத்தம் 26 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் இலங்கை 20 முறை வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ள நிலையில், 05 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன.


















