இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தனது முதல் போட்டியில் இந்தியாவின் சதங்கள் ஒரு முக்கியமான தருணத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
லீட்ஸில் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இந்தியாவின் துடுப்பாட்ட வேகத்தை உயர்த்தி, முக்கியமான சதங்களை பதிவு செய்து அணியின் ஓட்ட இலக்கினை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.
இந்தியா இறுதியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதனால், இங்கிலாந்து அணிக்கு மொத்தம் 371 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 21/0 என்ற நிலையில் இருந்தது.
கடைசி நாளில் வெற்றிக்கு இன்னும் 350 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
96 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக ரிஷாப் பந்த் ராகுலுடன் இணைந்து இந்தியாவை நிலைப்படுத்தினார்.
இவர்களின் இணைப்பாட்டமாக 195 ஓட்டங்கள் பெறப்பட்டது.
இந்த ஜோடி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் நான்காவது விக்கெட்டுக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது.
ஒட்டுமொத்தமாக, இது இங்கிலாந்தில் நான்காவது விக்கெட்டுக்கு இந்தியாவின் நான்காவது சிறந்த செயல்பாடாகும்.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பந்த் மற்றும் ஷுப்மான் கில்லின் 205 ஓட்டங்கள் இந்தியாவின் மூன்றாவது சிறந்த இணைப்பாட்டமாகும்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
247 பந்துகளில் 137 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த அதிரடியான இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் அடங்கும்.
இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக ராகுல் அடித்த மூன்றாவது டெஸ்ட் சதம் இதுவாகும்.
ஒட்டுமொத்தமாக, ஆசியாவிற்கு வெளியே மிக நீண்ட வடிவத்தில் ஒரு தொடக்க வீரராக 33 வயதான அவரது ஆறாவது சதமாகும்.
இது சுனில் கவாஸ்கரின் 15 சதங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்கு இரண்டாவது சிறந்த சதமாகும்.

முதல் இன்னிங்சில் ஏற்கனவே சதம் அடித்திருந்த பந்த் , இரண்டாவது இன்னிங்சில் அதை இரட்டிப்பாக்கி, ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்களை அடித்த இரண்டாவது விக்கெட் காப்பாளர் ஆனார்.
ரிஷாப் பந்த் இங்கிலாந்தில் தனது அதிகபடியான திறனை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல.
2018 ஆம் ஆண்டு தனது முதல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
140 பந்துகளில் 118 ஓட்டங்களை விறுவிறுப்பாக எடுத்த பந்த், தனது ஆட்டத்தின் போது 15 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களை விளாசினார்.
போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.















