இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஈரான் வான்வெளி இன்று (25) பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வீதிகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அகவன் தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:00 மணி (GMT 10:30) வரை அமுலில் இருக்கும் என்று குறிப்பிட்டார்.














