கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று, மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்ற சிறிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தை செலுத்திய சாரதியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்தின்போது லொறியில் இருந்த இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த பகுதியில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (28) அதிகாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














