• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா !

தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/29
in ஆசிரியர் தெரிவு, உலகம், சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல்.

இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது அது தாய்லாந்து கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமாக மாறியது.

இந்த சர்ச்சைக்குரிய கோவிலின் ஒரு சிறிய வரலாறு குறித்து பார்ப்போம்.

11ஆம் நூற்றாண்டில் ப்ரே விஹார் கோவிலின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.

தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது.

மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது.

இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மத தலம்.

இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா.

நீதிமன்ற அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

பின்னர் இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தீர்ப்பு வழங்கியது .

அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 1904ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது.

மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே கோயில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

ஆனால், இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருவேளை வரைபடத்தை ஏற்றிருந்தால், தவறான புரிதலில் அது நடந்திருக்கும் என்றும் தாய்லாந்து வாதிட்டது.

ஆனால், தாய்லாந்து உண்மையில் வரைபடத்தை முன்னர் ஏற்றுக்கொண்டதை கண்டறிந்த நீதிமன்றம், கோயில் கம்போடிய பகுதிக்குள் அமைந்துள்ளது என தீர்ப்பளித்தது.

அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பி தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

இந்நிலையில்தான் எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தாய்லாந்து-கம்போடியா இடையில் மோதல் ஆரம்பமானது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது.

இந்த மோதலால் இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் தலைமையில் கோலாலம்பூரில் இரு நாட்டு பிரதமர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

blankblankblank

Related

Tags: border conflictcambodiaThailandworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரோ- நாசா இணைந்து தயாரித்த கூட்டு செயற்கைக்கோள் நாளை விண்ணிற்கு !

Next Post

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

Related Posts

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!
இலங்கை

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!

2026-04-28
யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!
இலங்கை

யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

2026-04-28
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!
இந்தியா

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!
இங்கிலாந்து

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

2026-04-28
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!
இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

2026-04-28
Next Post
முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம் – ஜனாதிபதி

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம் - ஜனாதிபதி

பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்!

பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

0
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

0
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

0
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.