• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மாரீசன் – திரை விமர்சனம்

மாரீசன் – திரை விமர்சனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/31
in சினிமா, பல்சுவை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சுதீஷ் சங்கர்
நடிப்பு : வடிவேலு, பஹத் பாசில், விவேக்பிரசன்னா, சித்தாரா, கோவை சரளா
இசை : யுவன்சங்கர்ராஜா
ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி
வெளியான தேதி : ஜூலை 25.20.25
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

அல்சைமர் என்ற ஞாபக மறதிநோயால் அவதிப்படும் வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்த திருடனான பஹத் பாசில், அதனை  அபகரிக்க அவர் பின்னாலேயே சுற்றுகிறார். வடிவேலு வைத்திருக்கும் ஏ.எடி.எம் இலக்கத்தை  பஹத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா என ஆரம்பிக்கிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் வடிவேலு கதாபாதிரத்தில் அதிரடி மாற்றங்கள். சில ‘சம்பவங்களை’ செய்கிறார். உண்மையில் வடிவேலு யார்? வடிவேலு, பஹத் பாசில் உறவு எப்படி முடிகிறது என்பது மாரீசன் கதை.

blank

இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். கிருஷ்ண மூர்த்தி இத் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து விடுதலையாகும் திருடனான பஹத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட நினைக்கிறார். அங்கே இருக்கும் ஞாபக மறதிக்காரரான வடிவேலு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபகரிக்க  நினைக்கிறார். அதற்கு அவரின் ஏடிஎம் அட்டையின் இரகசிய இலக்கம்  தேவைப்படுகிறது. அதை தெரிய வடிவேலு சொல்படி திருவண்ணாமலை, கோவை என அவருடன் மோட்டார் சைக்கிளில்  சுற்றுகிறார். இப்படி பயணத்திலேயே முதற்பாதி முடிந்துவிடுகிறது.
blank
அடுத்த பாதி கதை வேறு மாதிரி நகர்கிறது. வடிவேலுவின் உண்மையான குணம், அவர் நோக்கம் வெளிப்படுகிறது. பின்னர் திரைப்படத்தின் இறுதியில் இன்னொரு டிவிஸ்ட் என ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது  மாரிசன்.

சற்றே வயதான வேடத்தில், தனக்கே உரிய, வழக்கமான உடல்பாவனை, டயலாக் டெலிவரி, நகைச்சுவை  என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார் வடிவேலு. கலகலவென, காமெடி செய்யும் வடிவேலுவை இப்படி பார்ப்பது முதலில் வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவரின் கதாபாத்திரத்துடன் ஒன்றி விட, நாமும் அவரை பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, வடிவேலு ஞாபகமறதியால் அவர் தவிக்கும் காட்சிகள் , இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.

வடிவேலுவுக்கும், அவர் மனைவியாக வரும் சித்தாராவுக்குமான பாசப்பிணைப்பு அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  கடைசியில் பெண் குழந்தைகள் மீதான பாசம், பரிதவிப்பில் அவர் பேசும் வசனங்களும், செயல்களும் இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கின்றன. மனைவிக்காக வடிவேலு எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சிபூர்வமானவை, கொஞ்சம் கோபமானவை.

திருடனாக வரும் பஹத் பாசில் நடிப்பு தான் படத்தின் பெரிய தூண்  எனக் கூறலாம்.  முதற்பாதி முழுக்க அவர் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பஹத். என்ன, இன்னுமும் அவர் பேச்சில் அதிக மலையாள வாடை. சில வார்த்தைகள் புரிய கஷ்டமாக இருக்கிறது. வடிவேலுவை ஏமாற்ற அவர் நடிப்பதும், ஒரு கட்டத்தில் அவர் யார் என்பதை உணர்ந்து தவிப்பதும் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளன.

வடிவேலு மனைவியாக சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் ‛புது வசந்தம்’ சித்தாரா மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, பஹத் அம்மாவாக வரும் ரேணுகா, பொலிஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவுக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை.  நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வடிவேலு நண்பராக வரும் லிவிஸ்டனும் நடித்து கொட்டுகிறார். சின்ன கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, இறுதியில்  மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை  கொண்டாடும் அளவுக்கு இல்லை.

blank
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். வில்லனாக காட்டப்படும் சிலரின் பின்னணி குறித்து விரிவான காட்சிகள்  இல்லை. சில வசனங்களின் மூலம் அவர்கள் பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள், ஒருவகையில் அது குடும்பத்தினருடன் பார்க்க வைக்ககூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

முதற்பாதி நகைச்சுவை, பிற்பாதி திருப்பங்கள், திரில்லர் என வேறு திசைக்கு நகர்கிறது. பொலிஸ்  விசாரணையில் பல லாஜிக் சொதப்பல்கள். படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பு பலருக்கு பிடிபடவில்லை.

ஞாபக மறதி விஷயத்தில் வரும் டுவிஸ்ட், வடிவேலுவின் கிளைமாக்ஸ் செயல்பாடுகள், சித்தாரா போர்ஷன் ஆகியவை டச்சிங் என்றாலும், அந்த பயணம் இழுத்துக்கொண்டே போவதை எடிட் செய்து இருக்கலாம். பல கசாட்சிகளில்  பஹத் பாசில், வடிவேலு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை திரைப்படத்தை   எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமாக இருக்கும், கதையை நம்பி வந்தால் ஏமாற்றம் கிடைக்காது. ஒட்டு மொத்தத்தில் அழுத்தமான மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கிறது, வடிவேலு சிறந்த குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார்.

blank
வடிவேலுவை வைத்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற விழிப்புணர்வு கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் பேசுவதை கவனிங்க. அவங்க சோகமாக இருந்தால், மனம் விட்டு பேசுங்க என்ற கருத்து இன்றைக்கு தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், அந்த குடும்பத்தினர் வலியை, வடிவேலு மாதிரியான நடிகரை வைத்து சீரியசாக கதை சொல்லியிருப்பதும் இயக்குனர் தைரியத்தை, ஸ்கிரிப்ட் மீதான நம்பிக்கையையும் காண்பிக்கிறது.

Related

Tags: CinemaKollywoodகோவை சரளாசித்தாராதிரை விமர்சனம்பஹத் பாசில்மாரீசன்வடிவேலுவிவேக்பிரசன்னா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

Next Post

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

Related Posts

இலங்கை

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

2026-04-26
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

2026-04-26
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
இலங்கை

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

2026-04-26
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!
இலங்கை

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!
இலங்கை

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
Next Post
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

நாட்டின்  பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

0
பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

0

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

0
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.