கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 10 மணி நேரம், நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.














