கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சடலம் கிரேண்ட்பாஸில் கண்டெடுக்கப்பட்டது.
மற்றொன்று தெஹிவளையில் மீட்கப்பட்டது.
முதல் சடலம் நேற்று மாலை (29) கிரேண்ட்பாஸ், இங்குருகொடை சந்தியில் கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை.
ஆனால் அது 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் என நம்பப்படுகிறது.
அவர் சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கருப்பு காற்சட்டை மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இரண்டாவது சடலம் நேற்று மாலை தெஹிவளை, சிறிவர்தன வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர் தெஹிவளையைச் சேர்ந்த 23 வயதுடைய ஆண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














