இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ தற்போது வசித்து வரும் பெரிய மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
அவர் தற்போது 30 அறைகள் கொண்ட “ராயல் லாட்ஜ்” என்ற மாளிகையில் வசிக்கிறார். 2003-ல் அவர் அந்த வீட்டிற்கு 75 ஆண்டுகள் கால ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார்.
ஆனால், அவரைச் சுற்றி பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற குழந்தை பாலியல் குற்றவாளியுடன் இருந்த தொடர்பு பற்றிய சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ளன.
இதனால், பலர் மன்னர் சார்ல்ஸிடம் “நீங்கள் நேரடியாக அவரிடம் சென்று பேசுங்கள், அவர் அந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று கோரியுள்ளனர்.
ஆண்ட்ரூ, தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வருகிறார்.














