வருமான வரியை அதிகரிப்பது அல்லது பொதுச் செலவினங்களைக் குறைப்பதுதான் கணக்குகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரே வழி என சில உயர்மட்ட பொருளாதார வல்லுநர்கள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஐ எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்தில் பொருளாதாரத்தின் அடித்தளங்கள் வலுவாகவே உள்ளன எனவும் மேலும் நாடு நிரந்தர சரிவில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஊடகம் ஒன்றின் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவு திட்ட பொறுப்பு அலுவலகம் அதன் உற்பத்தித்திறன் வளர்ச்சி கணிப்பை சுமார் 0.3 சதவீத புள்ளிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதாவது, எதிர்வரும் ஆண்டுகளில் நிதியமைச்சு எதிர்பார்த்ததை விட குறைவான வரியை எடுக்கும் எனவும் மேலும் இது நாட்டின் நிதியில் £40 பில்லியன் வரை இடைவெளியை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவு திட்டம் குறித்த நாங்கள் முன்னறிவிப்புகளை வெறுமனே ஏற்றுக்கொள்ளக் கூடாது, ஆனால் இந்த ஆண்டு ஏற்கனவே செய்ததைப் போல அவற்றை மீற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக வும் அவ்வாறு செய்வது என்பது அடுத்த மாத வரவு செல்வது திட்டம் உட்பட இன்று தேவையான தேர்வுகளை எடுப்பதாகும், என்று நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரித்துள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 26 ஆம் திகதி வரவு செல்வது திட்டத்தின் போது வருமான வரி அல்லது தேசிய காப்பீட்டை உயர்த்துவதன் மூலம் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஒரு முக்கிய அறிக்கையின் உறுதிமொழியை மீறக்கூடும் என்ற ஊகம் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.














