நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது எனவும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் தேசிய கடனைக் குறைப்பதற்கும் இடையில் “கவனமான சமநிலையை ஏற்படுத்த” கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது நிதி விதிகளை மாற்றியதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரவுள்ள வரவுசெலவு திட்டம் குறித்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த வளர்ச்சியின் சுழற்சியை உடைக்க அது சரியான முடிவு” என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிதி விதிகளுக்கான எனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது என்பதை சந்தைகள் அறிந்திருப்பதால் மட்டுமே அந்த கூடுதல் முதலீட்டை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிலர்” “அந்த விதிகளைத் தவிர்த்து” பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற பகுதிகளை மறுவகைப்படுத்துவதன் மூலம் “விளைவுகள் இல்லாமல்” அதிக பணம் கடன் வாங்க பரிந்துரைக்கப்படுவதாகவும் ரேச்சல் ரீவ்ஸ் கூறியுள்ளார்.



















