இங்கிலாந்தின் மனநல பிரிவில் இறந்த 12 வயது சிறுமி மியா லூகாஸின் மரணம் குறித்த விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன.
கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அரிய நரம்பியல் கோளாறான சுயாதீன மூளையழற்சியால் (autoimmune encephalitis) ஏற்பட்ட கடுமையான மனநோயினால் 12 வயது சிறுமி மியா உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சிறுமி இடமாற்றம் செய்வதற்கு முன் ஒரு லும்பார் பஞ்சர் செய்யத் தவறியமை, அவளது மரணத்துக்கு பங்களித்திருக்கலாம் என்று விசாரணைக்குழுவின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த மரணத்திற்கான மேற்பார்வை குறைபாடுகள் குறித்து உயிரிழந்த மியாவின் தாய் அதிருப்தி தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட NHS அறக்கட்டளைகள் மன்னிப்பு கோரியதுடன் குழந்தைகளின் அரிய உளவியல் கோளாறுகளைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதலை வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்தன.














