மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதமடையும் ஆபத்து உருவாகியுள்ளதையடுத்து, அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பரப்புக்கடந்தான், அடம்பன் மற்றும் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.














