அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அடையாளம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கைகள் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுவருகின்றன.
அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால் மண்ணரிப்புகள் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்டு மணல் ஏற்றி வருகின்ற டிப்பர் வாகனங்களை அடையாளம் கண்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விரைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் சாரதிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.














