மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சாதனை அளவினை எட்டியே பொக்ஸிங் டே (Boxing Day) கூட்டத்திற்கு முன்னால், இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை152 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா 3:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று, தொடரை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில் தொடரின் நான்காவது போட்டியானது வெள்ளிக்கிழமை (26) காலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மிகவும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன் மூலம் 93,442 ரசிகர்களின் முன்னிலையில் போட்டியாளர்களை 45.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தனர்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பார்வையாளர்கள் வருகை தந்த போட்டியாக இது அமைந்தது.
இதன் மூலமாக 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டி பார்வையாளர்களின் சாதனை முறியடிக்கப்பட்டது.
இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணிக்காக நேசர் 35 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் மற்றும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையம் அதிகபடியாக பெற்றனர்.
இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இதையடுத்து, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 15 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

















