இங்கிலாந்தின் வர்த்தக தொழிற்சங்க காங்கிரஸின் (TUC) தலைவர் (Paul Nowak ) பால் நோவாக், தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியை அரசு உடனடியாகக் கையாள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தவறினால், அவர்கள் அதிருப்தியடைந்து வலதுசாரி மற்றும் தீவிரவாத அரசியல் கட்சிகளை நோக்கி ஈர்க்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கிறார்.
இதேவேளை, பொதுமக்கள் பலர் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் வெப்பமூட்டும் வசதிகளைத் தவிர்த்து வரும் சூழலில், பொருளாதார வளர்ச்சி சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சென்றடைய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவதுடன் மேலும் 80% மக்கள் தங்கள் நிதி மேம்படவில்லை என்று கூறுவதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறான காரணங்களால் அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அரசியல் ஏமாற்றங்கள் சமூகப் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















