அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பார்ப்பவரை மிரளவிட்ட திரைப்படம் டிமான்ட்டி காலனி.
டிமான்ட்டி காலனி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2024ஆம் ஆண்டு டிமான்ட்டி காலனி பாகம் 2 வெளியானது.
இந்நிலையில் தற்போது, இப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 இற்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

















