2026 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக இலங்கை சுங்கத் துறைக்கு 2,206 பில்லியன் ரூபாவினை வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட உண்மையான வருவாயை விடக் குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு முக்கிய காரணம் வாகன இறக்குமதியில் ஏற்பட்ட குறைவு ஆகும்.
சந்தை வாகனங்களால் நிரம்பியிருப்பதால், 2025 உடன் ஒப்பிடும்போது 2026 இல் வாகன இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் குறையும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
2025 டிசம்பர் 30 நிலவரப்படி, சுங்கத்துறை மொத்த வருவாய் ரூ.2,540.3 பில்லியனை வசூலித்துள்ளது.
இது முந்தைய அதிகபட்ச வருவாய் சாதனையான ரூ.1,500 பில்லியனை முறியடித்துள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் டித்வா சூறாவளி காரணமாக இறக்குமதிகள் குறைந்திருந்தாலும், நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்புக்குத் தேவையான பொருட்களின் இறக்குமதி காரணமாக மாத இறுதியில் வருவாய் அதிகரித்தது.
அதன்படி, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி மாத்திரம் சுங்கத்துறை 20 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.

















