மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
1939 டிசம்பர் இறுதியில் ஆரம்பமாகி 1940 ஜனவரி வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக ஜனவரி 10ஆம் திகதி உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















