வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசியூலா படையினர் கொல்லப்பட்டனர் .
மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர்.
இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசியூலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது கொல்லப்பட்ட பொது மக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.
தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்காக வெனிசியூலாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என இடைக்கால ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் 112 வரையான வெனிசியூலா படையினர் காயமடைந்துள்ளனர்.
வெனிசியூலாவில் கொல்லப்பட்ட தமது நாட்டு படையினரை கியூபா பொறுப்பேற்று, அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தியுள்ளது.














