உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன.
சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றியாளர்கள் அனைவரும் தங்களது கெமராவின் அசல் கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு, புகைப்படக் கலைஞரின் பெயர் தெரியாத வண்ணம் இந்தத் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்தியுள்ளனர்.
இந்த விருதுபெற்ற புகைப்படங்கள் விரைவில் லண்டனில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.















