ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது இரு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியபடுத்தப்பட்ட திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 குற்றச்சாட்டுக்கள், 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்றையதினம் (26) ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் இனால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170,000/=, 65,000/=அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் இற்கு கட்டளை இட்டார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் இனால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டன.













