வரவிருக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து சிரேஷ்ட வீரர் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகக்கிண்ணத்திற்கான அணிகளை அறிவிப்பதற்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே பல நாடுகள் தமது அணிகளை அறிவித்து முடித்துவிட்டன.
20 நாடுகள் மோதும் 2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 8 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இது 10-வது டி20 உலகக்கிண்ணத் தொடராகும். இதனை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தியாவின் 5 மைதானங்களிலும், இலங்கையின் 3 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடவுள்ளன.
இம்முறை இலங்கை அணி ‘பி’ (Group B) குழுவில் களமிறங்குகிறது.
















