மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான சில விமானப் பயணங்கள் இதில் அடங்குகின்றன.
பயணிகள் தமது விமானப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை www.srilankan.com என்ற இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
உதவி தேவைப்படும் இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் 0094 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், இது குறித்த மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட முகவரைத் தொடர்பு கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.












