• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஐரிஸ் தேனா என்ற கப்பல் தாக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை முதல் அவர்கள் தெற்கு துறைமுக நகரமான காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இன்னும் 10 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், இந்தியப் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட 84 ஈரானியர்களின் உடல்களும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரிஸ் தேனாவில் இருந்து உயிர் தப்பியவர்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி கையாளப்படுவதாகவும், அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உதவிக்காகத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பல் மூழ்கிய ஒரு நாளுக்குப் பின்னர் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட தெஹ்ரானின் இரண்டாவது கப்பலான ஐரிஸ் புஷேரில் இருந்து மேலும் 219 ஈரானியர்களுக்கு இலங்கை பாதுகாப்பான புகலிடத்தையும் வழங்குகிறது.

குறித்த கப்பலிலிருந்து வந்த நபர்கள் தலைநகர் கொழும்புக்கு வடக்கே உள்ள வெலிசாரவில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் கப்பல் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, ஐரிஸ் புஷேர் கப்பலை வடகிழக்கு துறைமுகமான திருகோணமலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது, எனினும், இயந்திரக் கோளாறு, பிற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து தாமதமாகியதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேநேரம், இந்த விடயத்தில் ஈரானியர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று வொஷிங்டனின் அழுத்தம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

மேலும், கொழும்பு சர்வதேச சட்டம் மற்றும் அதன் சொந்த உள்நாட்டுச் சட்டத்தால் மட்டுமே வழிநடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

கடலில் மீட்கப்பட்ட ஈரானியர்களின் நிலைப்பாடு இலங்கையைப் பொறுத்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். 

இந்த சூழ்நிலையை கையாள்வதில் இலங்கையின் இறையாண்மையை அமெரிக்கா நிச்சயமாக மதிக்கிறது மற்றும் அங்கீகரிக்கிறது என்று கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், இந்தியா சனிக்கிழமை மூன்றாவது ஈரானிய போர்க்கப்பலான IRIS Lavanஐ அதன் துறைமுகங்களில் ஒன்றில் மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த அனுமதித்ததாகக் கூறியது.

லவன் கப்பல் புதன்கிழமை தென்மேற்கு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த வாரம் போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படை மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த மூன்று கப்பல்களும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Iranian sailorsIRIS DenaKarapitiyaஈரானிய மாலுமிகள்ஐரிஸ் தேனாகராப்பிட்டியகாலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

Next Post

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

Related Posts

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!
ஈரான்

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

2026-03-08
103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!
இலங்கை

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

2026-03-08
யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!
இலங்கை

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

2026-03-08
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!
இங்கிலாந்து

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!

2026-03-08
இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் – இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் – இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!

2026-03-08
ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

2026-03-08
Next Post
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

0
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

0
103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

0
யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

0
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.