• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

PM Modi launches development projects worth ₹33,500 crore in Delhi

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/09
in ஆசிரியர் தெரிவு, இந்தியா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கலும் நாட்டினார்.

தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்ளிட்ட பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் பிங்க் மற்றும் மெஜந்தா வழித் தடங்கள் இணைக்கப்பட்டு நாட்டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங் மெட்ரோ) அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிங்க் வழித்தடத்தில் 12.3 கி.மீ. நீள மஜ்லிஸ் பார்க் – உஜ்பூர் – பாபர்பூர் பாதை, மெஜந்தா வழித் தடத்தில் 9.9 கி.மீ. நீள தீபாளி சவுக் – மஜ்லிஸ் பார்க் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 3 புதிய மெட்ரோ வழித் தடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

டெல்லி சரோஜினி நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஊழியர்களுக்காக ரூ.15,200 கோடி மதிப்பில் 9,350 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் பிரதமர் மோடி வழங்கினார். ஒட்டுமொத்தமாக ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், ஆட்சி நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என அனைத்து துறைகளிலும் இந்தியப் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். டெல்லியை சர்வதேச நகரமாக உருவாக்க வேண்டும். இதற்காக டெல்லியின் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ சேவை, 375 கி.மீ. ஆக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது நாட்டின் முதல் ரிங் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டெல்லியில் 1,800 மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டெல்லி சுற்றுவட்ட சாலையால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை இன்ஜின் அரசால் டெல்லியில் வளர்ச்சி திட்டப் பணிகள் விரைவு பெற்றுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு முழுவதும் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பலன் அடைந்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 10 கோடி பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம். நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்க சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அம்மாநில அரசு அவமதித்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்கத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்

Next Post

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

Related Posts

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

2026-03-08
டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

2026-03-08
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

2026-03-08
இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் – இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் – இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!

2026-03-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-08
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!
இந்தியா

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

2026-03-07
Next Post
உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் - IMF எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

0
டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்

0
சர்வதேச சந்தையில்  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

0
இலங்கை மின்சார சபை கலைப்பு – 6 புதிய நிறுவனங்கள்

இலங்கை மின்சார சபை கலைப்பு – 6 புதிய நிறுவனங்கள்

0
உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

2026-03-09

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.