எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 40 புள்ளி உலகளாவிய பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிதியமைச்சின் அனுசரணையுடன் நடந்த கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதற்கும் தயாராக இருக்குமாறு கொள்கை வகுப்பாளர்களுக்கு எனது ஆலோசனைகளை தெரிவித்துள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.













