கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (10) மூன்றாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள யூனியன் தெருவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அருகிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையம் மூடப்பட்டதால், அந்த நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அதன் வழியாகச் செல்லும் அனைத்துப் போக்குவரத்தும் தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையும் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
தீப்பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அவசர சேவைகள் இன்னும் தளத்தில் உள்ளதாகவும், அவர்களின் மீட்பு பணிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றோம் என்று ஸ்கொட்லாந்து ரயில் வலையமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தீ விபத்தில் சேதமடைந்த வர்த்தக நிலையங்களுக்கு உதவுவதற்காக 80,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.
தீ விபத்தில் அதிக சேதம் அடைந்த கட்டிடம் 1851 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்றும் தெரிவிக்கப்படுகிறது.











