இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் ஒரு வலுவான செய்தியை விடுத்துள்ளது.
லாரிஜானியின் இழப்பு ஏற்பட்டபோதிலும், தனது நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி (Syed Abbas Araghchi) கூறியுள்ளார்.
ஒரு தனி நபரின் இருப்பு அல்லது இல்லாமை ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதிக்காது என்று கூறியுள்ளார்.
மேலும், டோஹாவை தளமாகக் கொண்ட செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர், மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்றும், அதனால் ஏற்பட்ட மனித மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு வொஷிங்டன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அராக்சி கூறினார்.
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும், அதன் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவருமான லாரிஜானி, தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தனது மகளின் இல்லத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் தனது மகன், துணைத் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் கொல்லப்பட்டார் என்று ஈரானிய அதிகாரிகள் செவ்வாயன்று (17) உறுதிப்படுத்தினர்.













